உலகத்தமிழர் வரலாற்று மைய “முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல்” -பெருமளவானோர் பங்கேற்பு

Mullivaikal Remembrance Day United Kingdom
By Sumithiran May 18, 2023 07:04 PM GMT
Report

இருபத்தொரம் நூற்றாண்டில் உலகமே பார்திருக்க  ஓர் இனம் இனப்படுகொலை செய்யப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளான அடையாளங்கள் அனைத்தும் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வல்லாதிக்க சக்திகளின் கொடும் கரம் கொண்டு  வஞ்சம் தீர்க்கப்பட்டு இன்றோடு 14ஆண்டுகள் கடந்தும், எம்மின உறவுகளின் உள்ளங்களில் என்றும் துயர்நிறைந்த  அந்த கொடூர நாட்களின் வடுக்கள் என்றும்  நெருப்பாக பற்றி எரிந்துகொண்டே இருக்கிறது

அது, ஓர் நாள் அவர்களின் இழப்பிற்கெல்லாம் நிச்சயமாக விடிவைப்பெற்றுத்தரும்.

முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் கொத்துக்கொத்தாக தமிழ்மக்கள் இனப்படுகொலைசெய்யப்பட்ட நினைவு நாள் வழமை போல் இந்த ஆண்டும் உலகத்தமிழர் வரலாற்று மைய வாளகத்தில் அமைந்துள்ள  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெருமளவான பொது மக்கள் கலந்து கொள்ள உணர்வெழுச்சியுடன்  கடைப்பிடிக்கப்பட்டது.   

 நிகழ்வின் ஆரம்பத்தில் பொது ஈகைச்சுடரினை  அற்புதவிநாயகர் ஆலய குருக்கள் பிரம்மசிறி சதீஸ்வர சர்மா,   நாடுகடந்த அரசாங்க பிரதிநிதி செல்வி சாமினி இராமநாதன் , இளையோர்களான செல்வன் சோதிதாஸ் மதி,மற்றும் செல்வி.பேரின்பநாதன் சஞ்சிகா , முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மகன் செல்வன் ஆரகன் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து பிரித்தானியா கொடியினை உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் ஆலோசகர் பாலகிருஸ்ணன் (பாலா மாஸ்ரர்) ஏற்றிவைக்க, ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் செங்குருதியால் தமிழர்களின் அடையாளமாக பட்டொளிவீசிப்பறந்த தமிழீழத்தேசியக்கொடியினை முன்னாள் போராளி கபில் ஏற்றிவைத்தார்.

நிகழ்வின் தொடர்ச்சியாக,அகவணக்கம் செலுத்த, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என  அடையாளப்படுத்தப்பட்ட  பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை நினைவாக ஏற்றிவைக்கப்படும் "இனப்படுகொலையின் பிரதான சுடரினை"  இன அழிப்பினை அடையாளப்படுத்தும் இசை ஒலிக்க, பிரிகேடியர் ஆதவன் அவர்களின் துணைவியார் திருமதி சுதா அவர்கள் ஏற்றிவைக்க  , சமநேரத்தில் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தமது உறவுகளை நினைவில் நிறுத்தி ஒழுங்குபடுத்தப்பட்ட சுடர்களை மனமுருகி கண்களில் கண்ணீர் சொரிய ஏற்றிவைத்து ஆத்மார்த்தமாக வணக்கம் செலுத்தினர்.

மேலும் முள்ளிவாய்கால் இனப்படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்ததூபிக்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்து ஆரம்பித்து வைக்க ,நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்களை ஏற்றி,மலர்வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து  முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின்  ஆத்ம சாந்திக்கான இறையாசிவேண்டிய உரையினை ஒக்ஸ்பேட் அற்புத விநாயகர் ஆலய குருக்கள் பிரம்மசிறி சதீஸ்வரசர்மா நிகழ்த்தினார்.

தொடரந்து இனப்படுகொலை நினைவுரைகளை தொழிற்கட்சியின் தமிழ்ப்பிரதிநிதி சென் கந்தையா(ஆங்கில மொழியில்) உலகத் தமிழர்வரலாற்று மைய அறங்காவலர் அவை உறுப்பினர் நிலக்சன் ஆற்றினார்கள்.

தொடர்ந்து இறுதிக்களம்வரை களமாடிய முன்னாள் போராளியும் தமிழீழ அரசிற்துறைப்பொறுப்பாளருமான ஜெயாத்தன் அவர்களும்  நிகழ்த்தியதை தொடர்ந்து  இனப்படுகொலையின நினைவுச் சிறப்புரையினை முன்னாள் போராளியும் உலகத்தமிழர் வரலாற்று மைய செயற்பாட்டளருமான சங்கீதன் அவர்கள் நிகழ்த்தினார்.

தொர்ந்து கடந்த காலங்களில் இதே மாதத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் நினைவாகவும் குறிப்பாக முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் நினைவாகவும்   மாவீரர் மண்டபத்தில்  நிலைப்படுத்தப்பட்டிருந்த  மாவீரர்கள் திருவுருவப்படங்களுக்கு அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

தொடர்ந்து உறுதியேற்புடன்  தேசியக்கொடிகள் கையேற்கப்பட, நிகழ்வி்ன் இறுதியாக முள்ளிவாய்க்கால்  கோரயுத்த காலத்தில் அங்கே ஏற்பட்டிருந்த உணவுத்தடைகாரணமாக அன்றைய காலத்தில்  எமது மக்களில் பசி தீர்த்த முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியும் வழங்கிவைக்கப்பட்டதுடன்,   அனைத்து நிகழ்வுகளையும் "நம்தேசம் தொலைக்காட்சியும், ஐபிசி தொலைக்காட்சியும் நேரலையாக வழங்கிக்கொண்டிருந்தமை நிகழ்வி்ல் கலந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்தவர்களும் தமது உறவுகளை  நினைத்து வணக்கம் செலுத்த ஏதுவாக இருந்தமையும் சிறப்பானதாக அமைந்திருந்தது.

வளாகத்தில அமைந்துள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி பூசை வழிபாடுகளும் நடைபெற்றிருந்தது. மேற்படி அனைத்து நிகழ்வுகளையும். தமிழர் கலைபண்பாட்டு நடுவமும், தமிழீழ மாவீரர் பணிமனையும் இணைந்து சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர். “வீழ்ந்தது அவமானமல்ல, வீழ்ந்து கிடப்பதே அவமானம், மீண்டெழ முயற்சிப்போம்”


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019