அல்ட்ரா மரதன் போட்டி : உலக சாதனை படைத்த பிரித்தானிய பெண்!
சர்வதேச ரீதியாக கடினமானதாக கருதப்படும் அல்ட்ரா மரதன் போட்டியின் பிரித்தானிய பெண்ணொருவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஜஸ்மின் பாரிஸ் எனும் நபர், குறித்த போட்டியை நிறைவு செய்த முதலாவது பெண் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதன்படி, 59 மணிநேரம், 58 நிமிடங்கள், 21 வினாடிகளில் குறித்த போட்டியை நிறைவு செய்து ஜஸ்மின் பாரிஸ் வரலாறு படைத்துள்ளார்.
மரதன் போட்டி
அல்ட்ரா மரதன் போட்டியின் நிபந்தனைக்கமைய, 60 மணி நேரத்துக்குள் இந்த போட்டி நிறைவு செய்யப்பட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இதுவரை 20 பேர் மட்டுமே இந்த போட்டியை நிறைவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் டெனஸ்ஸி பகுதியில் நடைபெற்ற அல்ட்ரா மரதன் ஓட்டப்போட்டியில் 40 வயதான ஜஸ்மின் பாரிஸ் பங்கேற்றார்.
பிரித்தானிய பெண்
இந்த மரதன் போட்டியில், 100 மைல்களுக்கும் அதிகமான தூரத்தை கடந்ததுடன் அவற்றில் மொத்தமாக 60 ஆயிரம் அடி உயரங்களையும் அவர் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What an incredible achievement #JasminParis pic.twitter.com/LVFDDUee2d
— Tom Brunt 🏊🏼♂️🏃🚴🏼♂️👨🏽💻👕 (@tom_brunt) March 23, 2024
அவர் ஏறியுள்ள மொத்த மலைகளின் உயரமானது இமய மலையை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயம் மிகுந்த சவால்மிக்கது என்றாலும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டு வந்தாக போட்டியின் வெற்றியாளரான ஜஸ்மின் பாரிஸ் தெரிவித்துள்ளார்.
போட்டி வெற்றி
மேலும் தெரிவிக்கையில், பந்தயத்தில் ஓடியபோது எனக்கு உற்சாகமாக இருந்தது. அதே சமயத்தில் சற்று பதற்றமாகவும் இருந்தது.
Absolutely salute Jasmin Paris, first woman to finish the Barkley Marathon. This is one of the greatest sporting achievements ever. The whole running community salutes you Jasmine Paris #legend #running #barkleymarathons #motivation pic.twitter.com/JFRHzqyiKs
— @drivenwinner (@drivenwinner) March 24, 2024
பந்தயத்தை வெற்றிகரமாக முடிப்பது எளிதன்று என எனக்குத் தெரியும். முடிக்க முடியாமல்கூட போகக்கூடிய சாத்தியம் அதிகம்.
ஆனால் அந்தச் சவாலை முறியடிக்க வேண்டும் என்ற இலக்குடன் ஓடினேன்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |