ஏலத்திற்கு வருகிறது உலகின் மிகப்பெரிய காண்டா மிருக பண்ணை
South Africa
By Sumithiran
தென்னாபிரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய காண்டாமிருக பண்ணையை ஏலம் விட அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளார்.
20000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பண்ணையில் 2000 காண்டாமிருகங்கள் வாழ்கின்றன.
செலவழிந்த செல்வம்
இந்த 2000 காண்டாமிருகங்களை 30 ஆண்டுகளாக பராமரிப்பதற்காக தனது செல்வம் முழுவதையும் செலவழித்ததாகவும், தற்போது 2000 காண்டாமிருகங்களும், பண்ணை அமைந்துள்ள 20000 ஏக்கர் நிலமும் தனக்கு மட்டுமே சொந்தமாக இருப்பதாக 81 வயதான ஜான் ஹியூம் தெரிவித்துள்ளார்.
இந்த விலங்குகளுக்கு அதிக பணம் செலவழிக்க முடியாத காரணத்தால் தான் தனது காண்டாமிருக விலங்கு பண்ணையை அதிக விலைக்கு ஏலம் விட முடிவு செய்ததாக ஜான் ஹியூம் கூறியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி