உலகில் முதல் 5 பணக்கார நாடுகள் - முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா...!
உலகில் பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.
பணக்கார நாடுகளில் மக்கள் செல்வத்தில் மிதக்க, ஏழை நாடுகளில் மக்கள் இரண்டு வேளை உணவுக்காக கூட ஏங்கி தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் உலகின் பணக்கார நாடுகள் எவை என்பதையும் ஏன் அவை பணக்கார நாடுகள் என்பதையும் பார்க்கலாம்.
முதலிடத்தில் அயர்லாந்து

2023 ஆம் ஆண்டை பொறுத்தவரை பணக்கார நாடுகளின் பட்டியலில் அயர்லாந்து முதலிடத்தில் இருக்கிறது.
அளவில் சிறிய நாடாக கருதப்படும் அயர்லாந்து உலக அளவில் வளமான நாடாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்டின் குறைவான மக்கள் தொகையும், பொருளாதார நிலைத்தன்மையும் இந்த சாதனைக்கு காரணம்.
உலகில் பணக்காரர்கள் நிறைய பேர் இங்கே முதலீடு செய்திருக்கிறார்கள்.
அடுத்த இடத்தில் லக்சம்பர்க்

உலகில் பணக்கார நாடுகளில் அடுத்த இடத்தில் இருப்பது லக்சம்பர்க். இந்த நாட்டுக்கும் அயர்லாந்துக்கும் மிக சிறிதளவே வித்தியாசம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது தனி நபர் வருமானத்தில் அயர்லாந்தை விட முன்னணியில் இருக்கிறது.
இந்த நாட்டில் ஆண்டு சராசரி தனி நபர் வருமானம் இந்திய மதிப்பில் ரூ.73 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
மேலும் இங்கு ஒருவர் தினமும் சராசரியாக ரூ.20,000 சம்பாதிக்கிறார்.
மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர்

அடுத்த இடத்தில் இருப்பது சிங்கப்பூர். இந்த தீவின் மக்கள் தொகை 59.81 லட்சம்.
பல ஆண்டுகளாக இந்த நாட்டில் முதலீடுகள் செய்வது, வர்த்தகம் என முதலிடத்தில் இருந்துவருகிறது.
இங்கே ஒரு ஆண்டின் சராசரி தனி நபர் வருமானம் இந்திய மதிப்பில் ரூ. 53 லட்சம். மேலும் இந்த நாட்டில் ஒருவர் தினமும் சராசரியாக ரூ.14,000 சம்பாதிக்கிறார்.
அடுத்த இடத்தில் கட்டார்

சிங்கப்பூருக்கு அடுத்த இடத்தில் கட்டார் இருக்கிறது. இந்த நாட்டின் மனித வளர்ச்சிக் குறியீடு 0.855 என்ற அளவில் உள்ளது.
இதன் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை கட்டாரை மிகவும் வளர்ந்த பொருளாதார நாடு என்று குறிப்பிடுகிறது.
இந்த நாட்டின் சராசரி தனி நபர் வருமானம் இந்திய மதிப்பில் ரூ. 51 லட்சம் ஆகும். அதிக அளவில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரி வாயு ஆகியவை இந்த நாட்டின் முக்கிய சொத்தாக கருதப்படுகிறது. 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        