உலக மக்களுக்கு நட்புக்கரம் நீட்டும் நகரங்கள்: இங்கே சென்றால் கொண்டாட்டம் தான்..!
உலகளவில் வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நட்புக்கரம் நீட்டும், சிறந்த நட்பு நகரங்கள் பட்டியலில் கனடாவின் டொராண்டோ முதலிடம் பிடித்துள்ளது.
சமூக மனநிலை குறியீடு என்பது உள்ளூர் மக்கள் அணுகுமுறை, நகரங்களுக்கு மீண்டும் வரும் பார்வையாளர் விகிதம், பாதுகாப்பு, தகவல் தொடர்பு பிரச்னையின்மை, மகிழ்ச்சி உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகளின்படி, சமூக மனநிலை குறியீட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 53 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. நட்புக்குரிய நகரங்கள் பட்டியலில், கனடாவின் டொராண்டோ முதலிடம் பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி 2வது இடம்பிடித்துள்ளது. பிரிட்டனின் எடின்பர்க், மான்செஸ்டர் 3வது, 4வது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் 5வது இடம் பிடித்துள்ளது. கனடாவின் மாண்ட்ரியல் 6வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் 7வது இடத்தையும், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ 8வது இடத்தையும், அயர்லாந்தின் டப்ளின் 9வது இடத்தையும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
நட்பற்ற நகரங்கள்
மேலும் நட்பற்ற நகரங்களில் கானா நாட்டில் உள்ள அக்ரா முதலிடம் பிடித்துள்ளது. மொராக்கோவில் உள்ள ரபத் நகரம் 2வது இடம் பிடித்துள்ளது.
இதில் இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை 3வது இடத்தை பிடித்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் 4வது இடத்தை பிடித்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ 5வது இடத்தை பிடித்துள்ளது. நம் தலைநகரமான டில்லி 6வது இடம் பிடித்துள்ளது.
கத்தாரின் தோஹா 7வது இடத்தையும், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் 8வது இடத்தையும், கொலம்பியாவின் மெடலின் 9வது இடத்தையும், பிரான்சின் லியோன் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.