யாழில் பிரபல உணவகமொன்றில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள்
Jaffna
Sri lanka Food Recipes
By Vanan
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் விற்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவிலே இந்தப் புழுக்கள் காணப்பட்டுள்ளன.
முகப்புத்தக பதிவு
இவ்வாறு உணவில் புழுக்கள் காணப்படும் காணொளியை ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,“யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள ஒரு பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள்.
இதை தான் பலரும் ரசித்து ருசித்து உண்கிறார்கள். இப்படியான சுவையான புழு உணவு யாருக்கு வேண்டும்.”எனப் பதிவிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி