கேரள செவிலியரின் மரணதண்டனையை உடன் நிறைவேற்ற வலியுறுத்து
ஏமனில் கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள கேரள மாநிலம் பாலக்காடைச் சேர்ந்த பிரியாநிமிஷாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உயிரிழந்த மஹ்தியின் குடும்பத்தினர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஷரியா சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றுவது மட்டுமே தங்களின் ஒரே கோரிக்கை என அவரின் சகோதரர் அப்துல் பத்தா மஹ்தி, ஓகஸ்ட் 9 ஆம் திகதி ஏமனின் மேஜர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த மாற்று ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்
அவர் அந்த கடிதத்தில்,‘நாங்கள் எந்த மாற்று ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனை மீண்டும் மீண்டும் உங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
எனவே தாமதம் இல்லாமல் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்ற எங்களின் இறுதி முடிவையும், உறுதியான நிலைப்பாட்டையும், தெளிவான கோரிக்கையையும் நாங்கள் தெரிவித்துவிட்டோம். பழிவாங்கலைத் தவிர வேறு எந்த மாற்றும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை செவிலியருக்கான மரண தண்டனை ஜூலை 16ஆம் திகதி நிறைவேற்றப்பட இருந்தது. பலதரப்பு பேச்சுவார்த்தை அடிப்படையில் தண்டனை நிறைவேற்றம் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
