போராட்டத்தின் போது தனது கருத்துக்களை வெளிப்படுத்திய இளைஞன் மீது கொடூர தாக்குதல்!
மிரிஹான போராட்டத்தின் பிரதான பொதுக் கருத்தை மிகவும் நிதானமாகவும், விவேகமாகவும் காவல்துறையிடம் முன்வைத்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த 35 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட இளைஞன் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த இளைஞனின் தலையில் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏழு மணித்தியாலங்கள் வரை காணாமல் போயிருந்த இளைஞன் தாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த வரை நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் காவல்துறையினரின் முன்னால் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
