வாள்வெட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் மரணம் - மன்னாரில் சம்பவம்
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாகி மாறிய நிலையில் ஒரு குழுவை சார்ந்தவர்கள் மற்றைய குழு நபர் மீது கூரிய ஆயதங்களால் தலையில் தாக்கியதில் படுகாயமடைந்த தாக்குதலுக்கு இலக்கானவர் நானாட்டான் பிரதேச புளியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் ராதா.துஷியந்தன் விஜய் என்கிற 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த முருங்கன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச புளியடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
