யாழில் இளம் குடும்ப பெண் மாயம்!
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்று முன் தினத்தில்(29) இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் இளம்குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார் இந்த பெண்ணை கண்டு பிடிக்க உதவுமாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இரவு நேரம் நித்திரையிலிருந்து காணாமற்போன குடும்பபெண்
கடந்த 29ம் திகதி இரவு 11மணியளவில் தூக்கத்தில் இருந்து கணவன் எழுந்து பார்த்தவேளை மனைவி காணாமல் போயுள்ளார். அதனையடுத்து கணவன் மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார். அங்கும் குறித்த பெண் போகவில்லை இதன் பின் பதற்றம் அடைந்த கணவன் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர்.
மருதங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு
இதனை தொடர்ந்து காணமல் போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் காவல்துறையினரும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுடன் குறித்த பெண் காணமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியினையும் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பம் கேட்டு நிற்கின்றனர் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
