பிரான்ஸிலிருந்து வந்த இளைஞன் யாழில் கொலை : இருவர் கைது!
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் கடந்த 19/11/2025 அன்று இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், அண்மையில் வடமராட்சி, கரவெட்டி - கரணவாய் பகுதியில் வைத்து பிரான்ஸிலிருந்து வந்த 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்த நிலையில், குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரை பின்தொடர்ந்து சென்ற இருவர் கூரிய ஆயுதங்களினால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் செல்லும் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிரிவி காமராவில் பதிவாகியிருந்த நிலையில் நெல்லியடி குற்றத்தடுப்பு காவல்துறையினர், யாழ் விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த கொலையுடன் சம்மந்தப்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |