மன்னாரில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழி

Mannar Selvam Adaikalanathan Dr.Archuna Chavakachcheri
By Sathangani Aug 05, 2024 04:18 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த  இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பாக உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி பட்டதாரியான மரியராஜ் சிந்துஜா என்ற 27 வயதான இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு பல்வேறு தரப்பினராலும் வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த பெண்ணின் மரணம் இடம்பெற்ற தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசண்டையீனம் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னாரில் சர்ச்சைக்குரிய இளம் தாயின் மரணம்: வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

மன்னாரில் சர்ச்சைக்குரிய இளம் தாயின் மரணம்: வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல் 

குறித்த மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று உரிய வைத்தியர் மற்றும் கடமையில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

மன்னாரில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழி | Young Woman Dies In Mannar Hospital Investigation

இந்த நிலையில் நேற்றைய தினம் (4) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன் போது கடந்த வெள்ளிக்கிழமை இரவு வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூறை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவின் (Ramanathan Archchuna) செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மன்னாரில் சர்ச்சைக்குரிய இளம் தாயின் மரணம்: வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

மன்னாரில் சர்ச்சைக்குரிய இளம் தாயின் மரணம்: வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

சட்ட நடவடிக்கை

மேலும் குறித்த பெண்ணின் மரணம் குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் உரிய தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் இந்த வைத்தியசாலை மீது உள்ள அவநம்பிக்கை தகர்த்தெறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

மன்னாரில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழி | Young Woman Dies In Mannar Hospital Investigation

அத்துடன் உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா நாடாளுமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிதாபமாக உயிரிழந்த இளம் பட்டதாரி தாய்: வைத்தியசாலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு

பரிதாபமாக உயிரிழந்த இளம் பட்டதாரி தாய்: வைத்தியசாலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025