உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவிக்கு நேர்ந்த துயரம்
புத்தளம், கலடிய பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி இன்று (26) தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து,பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் , புத்தளம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புத்தளம், கலடிய பகுதியைச் சேர்ந்த டி.எச். சாமுதி விதர்ஷனா என்ற இளம் மாணவி ஆவார்.அம்மா, அப்பா, ஒரே ஒரு சகோதரி மட்டுமே உள்ள குடும்பத்தில் மூத்த மகள் என்று தெரிவிக்கப்படுகிறது.
குருநாகலில் உயர்கல்வி டிப்ளோமா கற்று வந்தவர்
புத்தளம் ஆனந்தா தேசியப் பள்ளியில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவி தனது க.பொ.த உயர்தர பரீட்சையை முடித்துவிட்டு குருநாகலில் உயர்கல்வி டிப்ளோமா படித்து வந்துள்ளார்.
அவர் வாரத்தில் ஐந்து நாட்கள் குருநாகல் நகரில் நடைபெறும் உயர்கல்வி பாடநெறியில் கலந்துகொள்வதாகவும், நேற்று (25) மாலை வீடு திரும்பிய பிறகு, தனது தந்தை கொண்டு வந்த மரக்கறி ரொட்டியை மட்டுமே சாப்பிட்டுவிட்டு, இரவு உணவு சாப்பிட முடியாது என்று கூறி படுக்கைக்குச் சென்றதாகவும் பெறறோர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 16 மணி நேரம் முன்
