உலக சாதனை படைத்த இளம்பெண்! கயிறு மூலம் ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம்
பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி அந்நாட்டு தடகள வீராங்கனை ஒருவர், உலகச் சாதனையை படைத்துள்ளார்.
ஏனோக் கார்னியர் என்ற 34 வயதுடைய இளம் பெண் ஒருவரே, கயிறு மூலம் 361 அடி 110 மீற்றர் ஏறி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
அவர் அந்த சாதனையை, எதிர்பார்த்ததை விட இரண்டு நிமிடங்கள் முன்னதாகவே, அதாவது 18 நிமிடங்களில் முடித்துள்ளார்
உலக வெற்றியாளர் பட்டம்
பல்வேறு தடைகளைக் கடக்கும் சாகசப் போட்டியில் இரண்டு முறை உலக வெற்றியாளர் பட்டத்தை அவர் 2022 ஆம் ஆண்டில் பெற்றிருந்தார்.
சாதனையைப் படைத்த கார்னியேவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
புற்றுநோய்க்கான நிதி
புற்றுநோய்க்கு எதிரான “League Against Cancer” எனும் அமைப்புக்காக நிதி திரட்ட அவர் இந்த முயற்சியில் இறங்கியதாகக் கூறினார்.
மேலும் ஏனோக்கின் தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்காகவும் ஏனோக் இந்த சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |