யாழில் துயரம் - மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
jaffna
death
youth
By Sumithiran
யாழ்ப்பாணம் கொழும்புத் துறையில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுதேஸ்வரன் சுதர்சன் (வயது-29) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
இன்றையதினம் கொங்கிறீட் கல் அரியும் இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அதில் ஏற்பட்ட மின் ஒழுக்கு இளைஞரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி