ரணிலை தொடர்ந்து அர்ச்சுனாவை வம்புக்கிழுத்த தென்னிலங்கை யூடியூபர்: சபையில் வெடித்த சர்ச்சை!
சுதா என்ற தென்னிலங்கை யூடியூபர், தன்னை தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த காணொளியை நாடாளுமன்ற ஒழுக்காற்று குழுவில் சமர்ப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த யூடியூபரே முன்னாள் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படாவிட்டால் தனது இணையத்தளத்தை நிறுத்தி விடுவதாக தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் (22)நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலே அர்ச்சுனா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அநுரவின் நெருங்கி நண்பர்
அவர் மேலும் குறிப்பிடுகையில், சுதா என்பவர் அண்மையில் பிரதமர் ஹரிணியிடம் கை குலுக்கி கதைக்கும் காணொளி இருக்கிறது.
அத்தோடு அவர் ஜனாதிபதியுடன் நெருங்கி பழகியவர்.அவர் தான் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பரப்புச் செயலாளர் போல் திரிகிறார். அதனால் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அத்தோடு தேசிய மக்கள் சக்தியின் முன்வரிசை உறுப்பினர் காரில் வருகின்றனர்.பின்வரிசை உறுப்பினர்கள் ஊருக்கு செல்ல காரில்லை என என்னிடம் கூறுகின்றனர்.
இதையெல்லாம் நினைத்தால் வெட்கமாக இருக்கிறது, பெயர் குறிப்பிட நான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
