உக்ரைன் அதிபர் கொல்லப்படுவார் - விளக்கமளித்த ரஷ்யா..!
மேற்குலக நாடுகளாலேயே உக்ரைன் அதிபர் கொல்லப்படுவார் என்று ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களை வழங்கினர்.
ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க இதுவே உக்ரைனுக்குப் பெரியளவில் உதவியது. இதனிடையே இந்த ஆயுதங்களே இப்போது உக்ரைனுக்கு எதிராகத் திரும்பும் என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் அதிபர்
இது குறித்து டிமிட்ரி மெட்வெடேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மேற்குலக நாடுகளிடம் இருந்து உக்ரைன் அதிகப்படியாக ஆயுதங்கள் மற்றும் பணத்தை வாங்கியுள்ளது.
இதை நியாயப்படுத்த ரஷ்யா மீது நடத்தும் எதிர்த் தாக்குதலை உக்ரைன் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறது.
உக்ரைன் அதன் மேற்கத்திய எஜமானர்கள் செய்த முதலீட்டிற்கு எதாவது திரும்பத் தர வேண்டும். இல்லையென்றால், அது உக்ரைன் அதிபர் ஜெலஸ்ன்கி உட்பட அனைவருக்கும் சிக்கலைத் தரும்.
உக்ரைன் தலைமை
அவர்கள் பதவியை மட்டும் இழக்க மாட்டார்கள். உயிரையே இழக்கும் சூழலுக்கும் கூட தள்ளப்படலாம்.
உக்ரைன் தலைமையைப் பொறுப்பில் அமெரிக்கா வேறு ஒருவரையும் கூடக் கொண்டு வரக் கூடும். ஜெலென்ஸ்கியை ஒழித்துக்கட்டும்படி கட்டளையிட வாய்ப்பு உள்ளது.
The Kiev clown regime has to advance. They’ve got to work off the dough and weaponry received from the West. The masters’ disappointment can cost zelenskiy&Co not only their offices, but life itself.
— Dmitry Medvedev (@MedvedevRussiaE) June 7, 2023
The entire cocaine gang will be easily dumped all at once: the Washington…
இதனால் கடைசிக் கட்டமாக உக்ரைன் பல ஆயிரம் வீரர்களைத் திரட்டி ரஷ்யாவுடன் மோத வைப்பதே மட்டுமே ஒரு வாய்ப்பாக உள்ளது.
தீவிர தாக்குதல்
இதை நாம் அனுமதிக்கவே கூடாது. உக்ரைன் ஆட்சியை முழுமையாகத் தூக்கியெறிய ரஷ்யா ஒரு தீவிர தாக்குதலை நடத்த வேண்டும்.
உக்ரைன் இதேபோல மேற்குலக நாடுகளைச் சார்ந்தே இருந்தால் இதற்கு உரிய எதிர்காலம் இருக்காது.
அதன் சரிவையும் நம்மால் தவிர்க்க முடியாது. 2014இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை திரும்பப் பெற உக்ரைன் முயன்றால், அது இந்த போர் பல ஆண்டுகள் நீட்டிக்கக் காரணமாக அமைந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.
