ட்ரம்ப்பை எதிர்க்க தயார்: புதிய மேயர் பகிரங்க எச்சரிக்கை
நியூயோர்க் நகரத்திற்கு தீங்கு விளைவிக்க ஜனாதிபதி முடிவு செய்தால், அவரை எதிர்த்து நிற்கத் தயாராக இருப்பதாக நகரின் புதிய மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆற்றிய முதல் உரையில் குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்காவின் அதிக வாழ்க்கை செலவை கொண்ட நகரமாக நியூயோர்க் உள்ளது.

எனது வெற்றி நியூயோர்க் நகரத்தின் வாழ்க்கை செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நியூயோர்க்கில் வசதி படைத்த முதல் ஒரு சதவீதமானோருக்கு வரியை உயர்த்த வேண்டும்.
அதிக செலவு
ஆண்டுக்கு ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் சம்பாதிப்போருக்கு இரண்டு வீதம் நிலையான வரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
குழந்தை பராமரிப்புக்கான அதிக செலவு காரணமாக தொழிலாளர்கள் ஏற்கனவே நகரத்திலிருந்து வெளியேறுகின்றனர் இதனால் வணிகங்கள், திறமையான தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்ள சிரமப்படுகின்றன.

இதேவேளை, மம்தானி வெற்றி பெற்றால் நகரத்திற்கான கூட்டாட்சி நிதியைக் குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தினார்.
நியூயோர்க் நகரத்திற்கு தீங்கு விளைவிக்க ஜனாதிபதி முடிவு செய்தால், அவரை எதிர்த்து நிற்கத் தயாராக உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |