வீடு காணி இழந்தவர்களுக்கு 1கோடி உதவித்தொகை! நாடாளுமன்றில் அநுர உறுதி
மத்திய வங்கி வெளியிடவுள்ள சுற்றறிக்கையின்படி அனர்த்த நிதி திட்டமிடல்கள் விரைவில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் காப்புறுதி தவணை முறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் விரைவில் கலந்துரையாடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பாதிக்கப்பட்ட மக்கள்
“பாதிக்கப்பட்ட மக்களை இருந்ததை விட சிறந்த இடத்திற்கு கொண்டுசெல்ல கடமைப்பட்டுள்ளோம். இது விரைவில் சாத்தியமாக்கப்படும்.
குறிப்பாக மாணவர்களுக்கு விசேட உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. திறைசேரியில் இருந்து 15000ரூபாவும், ஜனாதிபதி நிதியில் இருந்து 10000 ரூபாவையும் வழங்கவுள்ளோம்.
குறிப்பாக வீடுகளை முற்றுமுழுதாக இழந்தவர்களுக்கு 50 இலட்சத்தை வழங்கவுள்ளோம். காணிகள் தொடர்பாகவும் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும். அவர்களுக்கும் 50 இலட்சத்தை வழங்கவுள்ளோம்.
காணி மற்றும் வீடு இரண்டையும் இழந்தவர்களுக்கு சரியாக ஆராய்ந்து 1கோடி ரூபா வழங்கப்படும். வீடுகளை பகுதியளவில் இழந்தவர்களுக்கு மருசீரமைப்பு அடிப்படையில் 25 இலட்சம் ரூபாவை 4 தவனைகளில் வழங்கவுள்ளோம்.
தகரம் இல்லாது போிருந்தால் கூட 10 இலட்சம் வழங்கப்படும். முன்னர் போல 2000ரூபா வழங்குவதால் என்ன பயன்?
மரணித்தவர்களுக்கு 10 இலட்சம் உறவினர்களிடத்தில் வழங்கப்படும். உயிரிழந்தவர்களுக்கு பெருமதியை வழங்கமுடியாது. இருந்தாலும் இந்த மக்களின் வாழ்க்கையை சீரமைப்பதை விட வேறு எதுவும் முக்கியமிக்க விடயம் அல்ல” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |