துர்நாற்றம் வீசும் மன்னார் தீவு : அனர்த்தத்தின் அவலங்களைப் பேசும் மக்கள்
மன்னார் மாவட்டத்தின் தேக்கம் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னர் சுவாசிக்க முடியாத அளவில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கால்நடைகள் இறந்ததுடன், தாவரங்கள் நீரில் மூழ்கி அழுகியதனால் இவ்வாறு துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் தேக்கம் பகுதியில் ஏராளமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இந்த அனர்த்தத்தில் இருந்து தங்களால் மீள முடியாத நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
மாற்றிக்கொள்வதற்கு உடைகள் கூட இன்றி அவல நிலையில் இருப்பதுடன் ஒரு நேரமே சாப்பிட்டதாகவும் மன்னார் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வெள்ள அனர்த்தத்தினால் உரிமையாளர்களின் 50 வீதமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் மக்கள் கருத்து நிகழ்ச்சியின் கீழுள்ள காணொளியில் காண்க.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |