இலங்கையின் அரச ஊழியர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் வெளியான தகவல்!
இலங்கையில் இன்று 13 பேருக்கு ஒரு அரச சேவையாளர் பணியில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் இன்று 13 பேருக்கு ஒரு அரச சேவையாளர் பணியில் இருப்பதாக குறிப்பிட்ட அலி சப்ரி 1948ஆம் ஆண்டில் 113 பேருக்கு ஒரு அரச சேவையாளர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இன்று 13 பேருக்கு ஒரு அரச பணியாளர், பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு அவர்களுக்கான நிதிகளை ஒதுக்கமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் இன்று மொத்த வருமானம் 1.4 ரில்லியன் ரூபாய்கள் எனவும் மொத்த செலவீனம் 3.4 ரில்லியன் எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டின் அரசியல் கலாசாரம் தொடர்பில் தாம் கடுமையான அதிருப்தியை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் எதிர்வரும் மாதங்கள் மிகவும் கடுமையான காலமாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதை, அலி சப்ரி உறுதிப்படுத்தினார்.