அரிசி பிரச்சினைக்கு தீர்வு: கொழும்பை நெருங்கியுள்ள இந்திய கப்பல்
இந்தியாவின் துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஏற்றப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை நெருங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய துறைமுகங்களில் இருந்து ஏற்றப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் அரிசி இம்மாதம் 13ஆம் திகதி வரை கொழும்பை வந்தடையும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, மேலும் 20,000 மெற்றிக் தொன் அரிசி நத்தார் பண்டிகைக்கு முன்னரே நாட்டை வந்தடையும் எனவும் நாட்டின் பிரதான அரிசி இறக்குமதியாளர் ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரிசி வகைகள்
இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அரிசியை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் கையிருப்பு சந்தைக்கு விடுவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, கொண்டுவரப்பட்டுள்ள இந்த அரிசி கையிருப்பில் நாட்டு அரிசி உட்பட பல்வேறு அரிசி வகைகள் உள்ளடங்குவதாக இறக்குமதியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்