அதிகரித்த வேகத்தால் மோதிய பேருந்துகள் - பத்து பயணிகள் படுகாயம்
Hospitals in Sri Lanka
Accident
By Sumithiran
இன்று (05) பிற்பகல் இரண்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த சம்பவத்தில் சுமார் 10 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிகம அக்குரஸ்ஸ பிரதான வீதியில் உடுகாவ நான்கு போஸ்ட் பகுதியில் இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அதிவேகமே விபத்துக்கு காரணம்
தனியார் பேருந்து ஒன்றும் இ.போ.ச பேருந்து ஒன்றுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
இ.போ.ச பேருந்து கொழும்பில் இருந்து அக்குரஸ்ஸ நோக்கியும் தனியார் பேருந்து மாத்தறையில் இருந்து வெலிப்பிட்டிய நோக்கியும் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அதிவேகமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்