எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு: 10 இந்திய மீனவர்கள் கைது
இந்திய மீனவர்கள்
நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறைக்கு அழைத்து வரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலை
அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 10 கடற்தொழிலாளர்களையும் அவர்களது விசைப் படகையும் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் கைது செய்யப்பட்டுள்ள 10 கடற்தொழிலாளர்கள் திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

