குடும்ப தகராறு காரணமாக 10 வயது சிறுவன் பலி (படங்கள்)
வரல்ல - வெளிமாருவ பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 10 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
இளுக்கெட்டிய பாலத்திற்கு அருகில் நேற்றிரவு 09.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வெளிமாருவ பிரதேசத்தில் இரவு 8.30 மணியளவில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதுடன், கணவன் கோபத்துடன் சென்று இளுக்கெட்டிய பாலத்திற்கு அருகில் மறைந்துள்ளார்.
குடும்ப தகராறு
பின் மனைவி தனது 12 வயதுடைய சிறுவனை பின்னாலும், 10 வயதுடைய சிறுவனை முன்னாலும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொஸ்மோதர காவல் நிலையத்திற்கு முறைபாடு செய்யச் சென்ற போது - இளுக்கெட்டிய பாலத்திற்கு அருகில் மறைந்திருந்த கணவன் மனைவியை கவ்வாத்து கத்தியால் வெட்டும் போது முன்னால் அமர்ந்திருந்த சிறுவனின் தலையில் பட்டுள்ளது.
இதனால் காயமடைந்த சிறுவனை தாயார் மொறவகாக கொஸ்நில்கொட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். பின் அங்கிருந்து கராபிடிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் சிறுவன் இன்று காலை 06.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
கணவன் - மனைவி ஆகிய இருவருக்கும் இது 3 ஆவது திருமணம் என்பதோடு, குறித்த பெண்ணின் 2 ஆவது கணவனின் பிள்ளையை 3 ஆவது கணவன் கொலைசெய்துள்ளார்.
பிரேத பரிசோதனை
குறித்த பெண்ணின் 3 ஆவது கணவரான குறித்த நபர் பேப்பள் ரேன்ஞ் இசைக்குழுவின் பாடகரும், தற்போது தேரங்கள மகா வித்தியாலத்தின் காவலாளி என்ற பிரசன்ன விக்ரமகே(44) என்பவராவர்.
இச்சம்பவத்தின் போது உயிரிழந்தவர் வெளிவ பௌத்த மகா வித்தியாலயத்தின் தரம் 5 இல் கல்வி பயிலும் ஏகொட கமகே சதேவ் நெத்சர(10) என்பவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
