கொடூரமான மரண தண்டனை : முதல் ஐந்து இடத்தில் உள்ள நாடுகள் எவை தெரியுமா..!
உலகளவில் தவறு செய்பவர்களுக்கு அந்தந்த நாடுகளில் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படுகின்றன.
அவ்வாறான தண்டனைகள் மரண தண்டனை,ஆயுள் தண்டனை மற்றும் வருடக்கணக்கான சிறைத்தண்டனைகளாக கூட இருக்கலாம்.
இலங்கை உட்பட சில நாடுகளில் நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டாலும் அது நிறைவேற்றப்படுவதில்லை.
எனினும் இந்த மரண தண்டனையை அதிகம் கொடூரமாக விதிக்கும் ஐந்து நாடுகள் தெடார்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.அவை குறித்து பார்க்கலாம்
முதலிடத்தில் சீனா
இவ்வாறு மரணதண்டனை விதிப்பதில் முதலிடத்தில் இருப்பது சீனா என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை குறித்த விபரங்களை சீனா மிகவும் இரகசியமாக வைக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு துப்பாக்கி மூலம் சுடுதல் அல்லது விஷ ஊசிகளை செலுத்தி கொல்லுதல் போன்றவை செய்யப்படுகின்றன.
ஈரானில் பெரும்பாலும் தூக்கிடுவதன் மூலம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பொது இடங்களில் வைத்து இந்த தண்டனைகள் நிறைவேற்றப்படும்.
சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. 2020 இல் இங்கு 27 பேருக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது
வடகொரியாவில் மரண தண்டனைகள்
ஈராக் நாட்டில் சிறு தவறுகளுக்கும் மரண தண்டனைகள் விதிக்கப்பட்டன. கார்களை கடத்துதல், ஆவணங்களை திருடுதல் போன்ற குற்றங்களும் இங்கு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
வடகொரியாவில் மரண தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. கொலை, பாலியல் வன்கொடுமை, உளவு பார்த்தல் போன்றவற்றுக்கு மரண தண்டனை வழங்கப்படும். அதன்பின்னர் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவது கிடையாது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
