உயிரிழந்தோரின் உறவினர்களை அலைய வைக்கும் வைத்தியசாலை: பொதுமக்கள் கடும் விசனம்

Trincomalee Death Sonnalum Kuttram Sri Lanka Elephants
By Independent Writer Jul 29, 2025 03:03 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

உறவினர்கள் உயிரிழக்கும் நிலையில் உறவினர்களின் குடும்பங்களை அலைய வைக்கும் விதத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலை (District General Hospital Trincomalee) நிர்வாகம் செயற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விபத்துக்கள் மற்றும் யானைகளின் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைகளுக்காக பிரேத பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு தூர இடங்களிலிருந்து சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றது.

இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத குளிரூட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் சடலத்தை பாதுகாக்கும் நோக்கில் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தூர இடங்களில் இருந்து வரும் மக்கள் பண வசதியின்றி வசதி குறைந்தவர்களாக காணப்படுகின்ற நிலையில் சடலங்களை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் வரை குளிர்சாதன பெட்டி இல்லாமையினால் வெவ்வேறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

இந்த நிலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் பதில் என்ன......

ஆழ்ந்த கவலையில் இருக்கின்ற நிலையில் உயிரிழந்த தனது உறவினர்களின் சடலங்களை அவசரமாக பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகின்ற உறவினர்களின் நிலை இன்னும் கவலையை ஏற்படுத்தும் செயலாகவே காணப்படுகின்றது.

ஆகவே திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பிரேதங்களை பாதுகாப்பதற்காக வேண்டி பழுதடைந்து காணப்படுகின்ற குளிர்சாதன பெட்டியை திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த காலங்களை விடவும் இந்த அரசாங்கம் மக்களுடைய நலன் விடயத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் காணப்படுகின்ற பிரேத குளிரூட்டி பழுதடைந்து காணப்படுகின்ற நிலையில் ஏன் வைத்தியசாலை நிர்வாகம் மௌனம் சாதிக்கின்றது.

யாழ் - கோப்பாய் பகுதியில் கோர விபத்து

யாழ் - கோப்பாய் பகுதியில் கோர விபத்து

தொடர் கைதுகள்..! இனிய பாரதியின் மற்றுமொரு சகா சிஐடியினரால் கைது

தொடர் கைதுகள்..! இனிய பாரதியின் மற்றுமொரு சகா சிஐடியினரால் கைது

அதிர்ச்சி தரும் புலனாய்வு நடவடிக்கை! இஸ்லாமிய பெயரில் நடமாடிய கிறிஸ்தவ அதிகாரி

அதிர்ச்சி தரும் புலனாய்வு நடவடிக்கை! இஸ்லாமிய பெயரில் நடமாடிய கிறிஸ்தவ அதிகாரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023