அமெரிக்காவின் கலிபோர்னியா தாக்கிய சுனாமி அலைகள்
புதிய இணைப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியாவை முதல் சுனாமி அலைகள் தாக்கி உள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, 1 அடிக்கு மேல் அலை காணப்பட்டுள்ளது, விரைவில் அதிக அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மூன்றாம் இணைப்பு
அமெரிக்க கரைகளை சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
ஹவாய் மாநிலத்தை சுனாமி அலைகள் தற்போது தாக்கி வருவதாகவும் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, ஹவாயில் உள்ள மௌய் தீவின் வடக்கு-மத்திய கரையில் உள்ள கஹுலுயில் ஐந்து அடிக்கு மேல் சுனாமி அலை எழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tsunami warning sirens blared Tuesday in Honolulu and people moved to higher ground.
— WAVE (@wave3news) July 30, 2025
https://t.co/58QKjd9Svb
இரண்டாம் இணைப்பு
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலும், அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் மற்றும் மைக்ரோனேசியாவின் சில தீவுகளிலும் சுனாமி தாக்கம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஹவாய் கடற்கரையின் சில பகுதிகள் கடல் மட்டம் குறைய தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுவாக சுனாமி அலைகள் வருவதற்கு முன்பு கடல் நீர் வழக்கத்திற்கு மாறாக வெகுதூரம் உள்வாங்குவது குறிப்பிடத்தக்கது .
முதலாம் இணைப்பு
ரஷ்யாவின் (Russia) கிழக்கு கடற்கரையில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்தவகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா, அலாஸ்கா மற்றும் ஹவாய்க்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்குள் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆபத்தான சுனாமி அலைகள்
இந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலில் 19.3 கி.மீ ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரத்திலிருந்து 125 கி.மீ கிழக்கு - தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும் ஆபத்தான சுனாமி அலைகளின் அறிகுறிகளைக் கவனிக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கனடா, ரஷ்யா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளும் சுனாமி எச்சரிக்கையில் உள்ளன.
அத்துடன், ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பூகம்பத்தின் ஆரம்ப கட்ட அளவுருக்களின் அடிப்படையில், பரவலான ஆபத்தான சுனாமி அலைகள் சாத்தியமாகும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
