வெளிநாடொன்றில் கோர விபத்துக்குள்ளான தொடருந்து: இருவர் பலி - 100ற்கு மேற்பட்டோர் படுகாயம்
Accident
World
Russia
By Raghav
ரஷ்யா (Russia) - தென்மேற்கு வோல்கோகிராட் (Volgograd) பகுதியில் பாரவூர்தி மீது தொடருந்து மோதியதில் 02 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் 20 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மீட்பு நடவடிக்கை
இதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது மேலும் 80 பேர் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மீட்பு நடவடிக்கைக்காக 324 அவசரகால பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு பணியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்