ஒரே நேரத்தில் 1000 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவை பதம் பார்த்தது உக்ரைன்
ரஷ்யா முழுவதும் ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்களை ஏவி மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் இன்று(18) நடத்தியுள்ளது.
உக்ரைன் - அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா மீதான இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பற்றியெரிந்த எண்ணெய் கிடங்குகள்
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள எண்ணெய் முனையம் ஒன்றின்மீது நடத்திய தாக்குதலால் அந்தப் பகுதி முழுவதும் தீப்பிடித்தது. அதேபோல, மற்றொரு எண்ணெய் கிடங்கிலும் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், ஒருவர் கொல்லப்பட்டு, 5 பேர் காயமடைந்துள்ளனர்.
1,015 ட்ரோன்களை தாக்கி அழித்த ரஷ்யா
ரஷ்யாவின் 15 பிராந்தியங்களில் உக்ரைனால் ஏவப்பட்ட 1,015 ட்ரோன்களை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் ஒரு பெண் பலியானதாகவும், 6 வயது சிறுமி உள்பட இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து, கல்வி நிறுவனம் ஒன்று சேதமடைந்து, பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |