இலங்கைக்கு கடத்தப்பட்ட 100 கோடி பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது
இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்திச் செல்வதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
நடுக்கடலில் சென்று கொண்டிருந்த நாட்டு படகை
அதை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து ரோந்து கப்பலில் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் விரைந்தனர்.
அப்போது தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த நாட்டு படகை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். இதில் அந்த படகில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போதைப் பொருட்கள் மற்றும் படகை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர், படகில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்திற்கு அவர்கள் 3 பேரையும் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.
இதில் கைதானவர்களில் ஒருவர் பாம்பன் அக்காள்மடத்தைச் சேர்ந்த ரெபின்ஸ்டன் (வயது 32), என்பதும் மற்ற 2 பேரும் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர்களா அல்லது வேறு ஊரைச் சேர்ந்தவர்களா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |