பாகிஸ்தானின் வணிக வளாகத்தில் தீ விபத்து : 11பேர் பலி
Pakistan
By Sathangani
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் வீதியில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.
இந்த வணிக வளாகத்தில் நேற்று (26) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
11 பேர் உயிரிழப்பு
இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி