கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

Pillayan
By Shalini Balachandran Jun 30, 2026 05:18 AM GMT
Report

புதிய இணைப்பு 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்று (30.06.2026) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

முக்கிய வழக்குகள் 

மேலும் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கொன்றில் 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 உயிரிழப்புகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்த CID விசாரணைகளில் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

2008 ஜனவரி 9 – கல்லடியில் 2 பேர் சுட்டுக்கொலை,  2008 மே 22 – காத்தான்குடியில் 2 பேர் சுட்டுக்கொலை , 2008 ஆகஸ்ட் 20 – வவுணதீவு பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சமபவம் குறித்து இந்த விசாரணைகள் முன்னனெடுக்கப்பட்டுள்ளன.

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்! | Pillayan Produced At Batticaloa Court Today

இவ்வழக்குகளில் பிள்ளையான் உட்பட 3 பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தற்போது வேறு ஒரு வழக்கில் விளக்கமறியலில் உள்ள பிள்ளையானை அடுத்த விசாரணை நாளில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த 16ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இரு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். 

முதலாம் இணைப்பு 

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்! | Pillayan Produced At Batticaloa Court Today

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்று (30.06.2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இன்றையதினம் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை

நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை

வெனிசுலாவில் புதைந்து போன மக்கள் - குடும்பத்தை இழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்

வெனிசுலாவில் புதைந்து போன மக்கள் - குடும்பத்தை இழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019