வெனிசுலாவில் புதைந்து போன மக்கள் - குடும்பத்தை இழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்
வெனிசுவேலாவின் கால்பந்து கழகத்தில் விளையாடும் அர்ஜென்டினா வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பத்தினர் இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் செய்தியை ட்ரெஜோவின் நண்பரும் கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தீவிர தேடுதல் நடவடிக்கைகள்
நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,719 ஆக உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத் தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சியில் பேசிய ரோட்ரிக்ஸ், மொத்தம் 5,034 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15,866 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தில், லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி யானினா மரணெல்லா மற்றும் அவர்களது பிள்ளைகளான ஆரோன் மற்றும் ஐன்ஹோவா ஆகியோர் காணாமல் போயிருந்தனர்.
அவர்களைக் கண்டறிய கடந்த 74 மணிநேரமாகத் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியில் மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இக்கட்டான இந்தத் துயர நேரத்தில், ட்ரெஜோவின் குடும்பத்தினருக்குத் தேவையான மரியாதையையும் ஆதரவையும் வழங்குமாறு ட்ரெஜோவின் நண்பரும் கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 20 மணி நேரம் முன்