நீதிமன்ற அவமதிப்பு : முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு CCIB அழைப்பு!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அவர் அந்தப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (02) காலை 10.00 மணிக்கு மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்து
சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில், விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக காவல்துறை மா அதிபருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய, இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் ஒரு பகுதியாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |