இலங்கையில் யுத்தகாலத்தை விட அதிகரித்த உயிர்மாய்ப்புக்கள்!
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்திற்கு பின்னர் ஏற்பட்ட சமூக இணைப்புக்களின் பிரச்சினைகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்புக்கள் அதிகரித்தமைக்கு காரணமாகும் என்று உள வைத்திய நிபுணர் வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் இளைஞர்கள் எந்நேரமும் போராட்டங்களில் ஈடுபாடாக இருப்பதனால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கின்றது என எண்ணுபவர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் வாழ்க்கை அர்த்தமற்றது என்ற எண்ணம் தோன்றுவதனாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின்னரும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது உலகளாவிய ரீதியில் பொதுவான தன்மை என்று தெரிவித்துள்ளார்.
சமூகம் நன்னிலை என்ற விடயத்தில் பாதிக்கப்பட்டிருப்பதும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |