கொழும்பு புறநகர் பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு!

Sri Lanka Police Kalutara Kidnapping
By Dharu Sep 30, 2026 03:52 AM GMT
Report

புதிய இணைப்பு

பாணந்துறை - வலான, மகாநாம வீதிப் பகுதியில் கடத்தப்பட்ட வர்த்தகர் மினுவன்பிட்டிய மயானத்திற்கு அருகில் கைவிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் தற்போது பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த வர்த்தகரின் மனைவியும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

பணத்தகராறு காரணமாகவே இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வர்த்தகரின் காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் வர்த்தகர் ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, ​​அடையாளம் தெரியாத குழுவினால் கடத்தப்பட்டுள்ளார்.

பாணந்துறை, மகாநாம வீதிக்கு அருகில் உள்ள உப வீதியொன்றில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் குறித்த வர்த்தகர் தனது இரு மகள்களுடனும் மனைவியுடனும் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

காணாமலாக்கல் சம்பவங்கள்! நீதிமன்றில் கோட்டாபயவிடம் சரமாரி கேள்விகள்

காணாமலாக்கல் சம்பவங்கள்! நீதிமன்றில் கோட்டாபயவிடம் சரமாரி கேள்விகள்

அடையாளம் தெரியாத நபர்கள்

இதன் போது, ​​வீட்டிற்கு அருகில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், வர்த்தகரைத் தாக்கி அவரது காரின் கண்ணாடிகளை உடைத்துக் கடத்திச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு புறநகர் பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு! | Brutally Attacked And Abducted In Colombo

இந்தச் சம்பவத்தில் வர்த்தகரின் இரு மகள்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவத்தில் காயமடைந்த மனைவி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத குழுவினர் குறித்த வர்த்தகரைக் கடத்த முயன்றபோது, ​​​​வர்த்தகர் தனது காரை நிறுத்தாமல் தொடர்ந்தும் செலுத்தியுள்ளார்.

இதன்போது கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்த வடிகானில் விழுந்துள்ளது. பின்னர் கடத்தல் கும்பல், வர்த்தகரின் காரின் கண்ணாடிகளை உடைத்து, வர்த்தகரை வெளியே இழுத்துத் தாக்கியதுடன், அவர்களின் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

சஹ்ரான் குழுவுக்கு புதிய தலைவர்! ஆரம்பமாகபோகும் விசாரணை

சஹ்ரான் குழுவுக்கு புதிய தலைவர்! ஆரம்பமாகபோகும் விசாரணை

கடத்தல் நடவடிக்கை

இந்த கடத்தல் நடவடிக்கையின் போது வர்த்தகரின் காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலை வர்த்தகரின் உறவினர் ஒருவரே திட்டமிட்டு கடத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பாணந்துறை காவல்துறை விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020