யாழ். நிலாவரையில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
Sri Lanka Police
Jaffna
Accident
By Thulsi
யாழ்ப்பாணத்தில் லொறி ஒன்றும் பழங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து சற்றுமுன்னர் (20.11.2026) யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி