சடுதியாக அதிகரித்த இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம்
இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை 8.75 சதவீதமாகக் காணப்பட்ட கொள்கை வட்டி வீதம் 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கி அறிக்கை
உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்காலப் பொருளாதாரக் கணிப்புகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் எதிர்பார்த்ததை விட நீண்டகாலம் தொடர்வதால், உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதுடன், உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக இலங்கையில் பணவீக்க அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |