நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி - சடசடவென சரியும் தங்கத்தின் விலை
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (20) 7,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று (20) முற்பகல் 10.00 மணிக்குப் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 345,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 317,400 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 352,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 323,800 ரூபாயாகவும் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை வீழ்ச்சியானது தங்க ஆபரண கொள்வனவில் ஈடுபடுவோருக்கு பாரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |