IPL இல் மஹெல ஜெயவர்தனவுக்கு புதிய வாய்ப்பு
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு சர்வதேச லீக்குகளில் அதன் கிரிக்கெட் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், இன்று (20) இந்த நியமனத்தை அறிவித்தது.
மகளிர் அணி பணிப்பாளர்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்), சர்வதேச லீக் டி20 (ஐஎல்டி20), மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) மற்றும் 'தி ஹன்ட்ரட்' ஆகியவற்றில் அணியின் செயல்பாடுகளை மஹேல மேற்பார்வையிடுவார் என்றும் அது உறுதிப்படுத்தியது.

மேலும், wpl இல் போட்டியிடும் அணியின் மகளிர் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராகவும் அவர் பொறுப்பேற்பார்.
இதற்கு முன்பு 2026 ஐபிஎல் சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
ஜெயவர்தன ஒரு வீரராகப் பிரதிநிதித்துவப்படுத்திய கடைசி ஐபிஎல் அணி டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகும். அவர் 2012 மற்றும் 2013 சீசன்களில் அந்த அணிக்காகக் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |