சஹ்ரான் குழுவுக்கு புதிய தலைவர்! ஆரம்பமாகபோகும் விசாரணை
சஹ்ரான் குழுவுக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரிடமுள்ள மேலதிக தகவல்களை அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை(29) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புலனாய்வு விசாரணை
“சஹ்ரான் குழுவின் புதிய தலைவர் நியமனம் சம்பிக ரணவகவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொடர்பில், காவல்துறைக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்கும்.

ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி என்ற ரீதியில், அவரிடம் இது தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது சான்றுகள் ஏதேனும் இருப்பின், அவற்றை உரிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பதே பொருத்தமான செயலாகும்.
மாறாக ஊடகவியலாளர் மாநாடுகளில் இவ்வாறான தகவல்களை வெளியிடுவது பொறுத்தமற்றது. உரிய தரப்பினரிடம் தகவல்கள் வழங்கப்பட்டால் தேவையான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கும் இலகுவாக இருக்கும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |