டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) வர்த்தக வங்கிகளில் சற்று அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் குறைந்துள்ளதுடன், விற்பனை விலை ரூ.334 முதல் ரூ.336 வரை பதிவாகியுள்ளது.
செலான் வங்கியில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை.
டொலரின் கொள்வனவு விற்பனை விலை
NDB வங்கியில் கொள்வனவு விலை ரூ.326.50 இலிருந்து ரூ.326.10 ஆகவும், விற்பனை விலை ரூ.335.50 இலிருந்து ரூ.335.10 ஆகவும் குறைந்துள்ளது.

மக்கள் வங்கியில் கொள்வனவு விலை ரூ.327.17 இலிருந்து ரூ.326.57 ஆகவும், விற்பனை விலை ரூ.335.28 இலிருந்து ரூ.334.67 ஆகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை ரூ.325.09 இலிருந்து ரூ.324.84 ஆகவும், விற்பனை விலை ரூ.335 இலிருந்து ரூ.334.75 ஆகவும் குறைந்துள்ளது.
சம்பத் வங்கியில் கொள்வனவு விலை ரூ.327 இலிருந்து ரூ.326.75 ஆகவும், விற்பனை விலை ரூ.335 இலிருந்து ரூ.334.75 ஆகவும் குறைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |