இலங்கையின் சில பகுதிகளுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை
ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த மாவட்டங்களில் இன்று (30.09.2026) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (30) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |