பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான, ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியின் அருகில் குண்டு வெடித்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான வஜிரிஸ்தான் பகுதியில் ராணுவ சோதனைச் சாவடிக்கு வேலைக்காக தொழிலாளர்கள் சென்ற வாகனத்தில் குண்டி வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு படையினரால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் மேலும் சிலர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்பு படையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் அமைதியின்மை
Heartbreaking to know about the terrorist attack in North Waziristan which claimed the lives of 11 innocent laborers. Strongly condemn this senseless act of violence and stand in solidarity with the families affected.
— Anwaar ul Haq Kakar (@anwaar_kakar) August 19, 2023
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரான அன்வர்-உல்-ஹக்கர் இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அதுமாத்திரமாளாமல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவினை செய்துள்ளார்.
பாகிஸ்தானிலே அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் பயங்கரவாத சம்பவங்கள் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.