விடுதலைப் புலிகளை வைத்து புனைந்த கதை வெளிச்சத்திற்கு! கரன்னாகொடவுக்கு சிக்கல்
கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் வழக்கை முடிவுக்கு கொண்டுவர, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் டந்த அரசாங்கங்கள் கூறிவந்ததாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களுக்கான வழக்கின் மனுதாரர் தரப்பான சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின, போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதால் இறுதி போரில் சம்பந்தப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என சமூகத்தை நம்ப வைக்க முனைந்தனர் எனவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆனால் உண்மை இன்று வெளிகொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
11 இளைஞர்கள்
குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களில் வெளிவராத பல தகவல்களை அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
“காணமால் ஆக்கப்பட்டவர்கள் 11 இளைஞர்களுக்கு அதிகமானவர்கள் இருப்பதாக தற்போது நடைபெறும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்தோடு இவர்கள் தமிழ் இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர் என தெரிவிக்கப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை.
தமிழ்,முஸ்லிம் மற்றும் இராணுவத்தில் கடமையாற்றியவர்களின் பிள்ளைகளும் இதில் இருக்கின்றனர்.
மேலும் காணாமல் ஆக்கப்படமை தொடர்பில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த இளைஞர்கள் பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என கூறப்பட்டதையடுத்து அது தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி முப்படையினர் மற்றும் காவல்துறை புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளில் இவர்கள் எவ்வித பயங்கரவாத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசந்த கரன்னாகொட
இந்த சம்பவத்தில் கடற்படையே ஈடுபட்டதாகவும், கடற்படையில் உயர் பதவியில் இருந்த அநேகர் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
குறிப்பாக வசந்த கரன்னாகொட முதல் முன்னாள் கடற்படை தளபதிகள் பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஆனால் அவர் இந்த காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் தொடர்பில் அல்ல. அவரின் மெய்ப்பாதுகாவலர் விடுதலைப் புலிகளிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டு மோசடியாக பணம் பெற்றுள்ளதாகவே முறைப்பாட்டில் சொல்லப்பட்டிருந்தது.
பின்னர் நாங்கள் தேடி பார்த்ததில் அது அவர்களின் தனிப்பட்ட முரண்பாட்டில் இவ்வாறு பொய்யாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
