திடீரென ரத்துசெய்யப்பட்ட அலுவலக தொடருந்துகள்! வெளியானது காரணம்
இலங்கையில் 11 அலுவலக தொடருந்துகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடர்ந்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (16) இந்த தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தொடருந்து சேவைகள்
தொடருந்து இயந்திர சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையினாலேயே அலுவலக தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து மொரட்டுவை, பாணந்துறை, வாத்துவ, நீர்கொழும்பு, அம்பேபுஸ்ஸ, பாதுக்கை மற்றும் ராகம ஆகிய பகுதிகளுக்கான தொடருந்து பயணங்களும், அந்த தொடருந்து நிலையங்களில் இருந்து மீண்டும் கோட்டை தொடருந்து நிலையங்களுக்குச் செல்லும் தொடருந்துகளுமே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் பணியிடங்களுக்குத் திரும்புவதற்காக இன்றும் கூடுதலான தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |