பேருந்தில் ஏறச்சென்ற மாணவிக்கு என்ன நடந்தது : கதறும் பெற்றோர்
Hospitals in Sri Lanka
School Incident
By Sumithiran
பாடசாலை முடிந்து பேருந்தில் ஏறச் சென்ற மாணவி திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு இறந்தவர் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பாடசாலை பேருந்து ஊழியர்கள் அவரை கெக்கிராவை வைத்தியசாலையில் துரிதமாக அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை
உடல் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனை நடத்திய போதிலும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உடல் பாகங்கள் இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டு, சிறுமியின் உடல் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்