இன்று முதல் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும்.
குறித்த அறிவித்தலை மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க (Kamal Amarasinghe) வெளியிட்டுள்ளார்.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர் பெரும்பாலும் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அருகிலுள்ள இடங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து தங்கள் பயணங்களின் போது தாங்களாகவே சாரதிகளாக செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள்
இதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மற்றும் இலகுரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவது கவனிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, வேரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், புதிய முறையின் கீழ், வெளிநாட்டினருக்கு இலகுரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரம் மட்டுமே வழங்கப்படும் என்றும், கனரக வாகனங்கள் அல்லது முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
