கொழும்பில் இருந்து வெளியேறுகிறார் மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ஒழிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்த சொத்துக்கள் எதுவும் பலவந்தமாக அபகரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் பாதகமாக அமையப்போகும் அநுரவின் முடிவுகள்
ஜனாதிபதிகள் ஆட்சியில் இருக்கும்போது எடுக்கப்படும் சில முடிவுகள் பின்னர் அவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பக்கூடும் என்றும், ஜனாதிபதி அநுர குமார எடுக்கும் இந்த முடிவுகள் எதிர்காலத்தில் அவருக்கு ஒரு தடையாக மாறக்கூடும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைப்பாளர்கள் குழுவிற்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களுடனான கேள்வி பதில் அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.
மகிந்தவிற்கு வீடுகளை வழங்கப்போகும் மக்கள்
முன்னாள் ஜனாதிபதிகளின் பட்டங்களை ஒழிக்கும் சட்டமூலம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொழும்பிலிருந்து அனுப்பினால், மக்கள் அவருக்கு நூறு வீடுகளை உறுதிகளுடன் வழங்க முன்வருவார்கள் என்று கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிந்தவுக்கு அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதி மாளிகைகளை கட்ட மக்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
